அல்வார்(ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தில் கெட்லி நகரத்தில் உள்ள சவுங்கர் சாலையில் வசித்து வரும் 90 வயது மூதாட்டி ஒருவர் நெடுநாட்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்-9ஆம் தேதி மதியம் 12 மணிக்கு கடவுள் தன்னை மரணிக்க கூறியுள்ளதாகத்தெரிவித்து, அவரது வீட்டிற்கு வெளியே சமாதி கட்ட முடிவு செய்தார்.
இதனையடுத்து அந்த கிராம மக்கள் வருகை தந்து, பாசுரங்கள் பாடி, புடவைகள் மற்றும் பணம் கொடுத்து, ஒருவரின் மரணத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை நடத்தினர். இந்த சடங்குகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து கத்துமார் தாசில்தார் கிர்தர் சிங் மீனா சம்பவ இடத்திற்குச்சென்று அந்த சடங்குகளை தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த மூதாட்டி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.