உத்தரப்பிரதேசம்: கோரக்பூர் மதன் மோகன் மால்வியா பல்கலைக்கழகம் எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் மாணவர்கள் இயற்கை சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத ட்ரோனை (biodegradable drone) தயாரித்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படும் மட்கும் பொருளான பாலி லாக்டிக் அமிலத்திலிருந்து ட்ரோன் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த ட்ரோன் தேசிய அளவில் நடைபெற்ற நடமாடும் பொருட்கள் போட்டியில் பாராட்டப்பட்டது.
இது ஒரு நேரத்தில் 5 கிலோமீட்டர் சுற்றளவினைக் கண்காணிக்க முடியும். அதன் உடல் பாலி லாக்டிக் அமிலத்தால் ஆனது என்று ஆராய்ச்சிக் குழுத் தலைவர் விவேக் சுக்லா விளக்குகிறார். அதன் பிறகு 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ட்ரோன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கட்டுமானத்தின் முழு செயல்முறையும் பல்கலைக்கழகத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான உபகரணங்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ளன.
ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பியூஷ் திரிபாதி கூறுகையில், ’ஆளில்லா விமானத்தை தயாரிப்பதில், அதன் பேட்டரியில் இருந்து, பறக்கும் போது காற்றழுத்தத்தை தாங்கும் கருவியின் அமைப்பு தயார் செய்யப்படுகிறது. இது மட்கும் தன்மை கொண்டது மற்றும் இந்த ட்ரோன் முழுமையாக செயல்படும்’ என்றார்.