சிமெடிகா(ஜார்க்கண்ட்):ஜார்க்கண்ட் மாநிலம், சிமெடிகா பகுதியைச் சார்ந்த தம்பதி போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, தம்பதியின் 8 வயது மகள், வீட்டின் அருகில் உள்ள மதரஸா பள்ளியில் உருது படிக்கச் சென்றதாகவும், அங்கு இமாமாக(இஸ்லாமிய மத குரு) உள்ள அமீன் என்பவர் சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை, இமாம் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். வன்கொடுமை குறித்து சிறுமியின் உறவினர்கள் தட்டிக் கேட்டதற்கு, இமாம் அமீன் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.