தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2021, 10:32 PM IST

ETV Bharat / bharat

'ஷப்னம் தூக்கு தண்டனை தேதி முடிவு செய்யவில்லை' - உ.பி., நீதிமன்றம்

லக்னோ: ஷப்னத்திற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என உத்தரப் பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Amroha murders
ஷப்னம் தூக்கு தண்டனை

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம்; இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தன் குடும்ப உறுப்பினர்கள் 7 பேரைக் கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஷப்னத்துக்கு மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரின் மரண தண்டனையை உறுதி செய்தது. மேலும், சமீபத்தில்அவர் குடியரசுத் தலைவருக்கு அளித்திருந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும், அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்துக்குப் பிறகு தூக்கிலிடப்பட்ட முதல் பெண் இவராக இருப்பார்.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details