தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Amrita Vishwa Vidyapeetham: மாணவிகளுக்கென பிரத்யேக கோடிங் போட்டி! - அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்

மாணவிகளிடையே கோடிங் கலாசாரத்தை அதிகம் கொண்டு சேர்க்கும் வகையில், பிரத்யேக கோடிங் போட்டி ஒன்றை அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்(Amrita Vishwa Vidyapeetham) கல்வி நிறுவனம் நடத்த உள்ளது.

Amrita Vishwa Vidyapeetham
Amrita Vishwa Vidyapeetham

By

Published : Nov 19, 2021, 7:39 PM IST

நாடு முழுவதும் உள்ள மாணவிகளுக்கென்று பிரத்யேக 'கோடிங்' போட்டியை அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் நடத்த உள்ளது.

AlgoQueen எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோடிங் போட்டி, மாணவிகளிடையே புரோகிராமிங் கலாசாரத்தையும், கோடிங் ஆர்வத்தையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு Amazon Web Services, IBM Q, JetBrains ஆகிய நிறுவனங்கள் நிதியுதவி செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளாக தேர்வு

மொத்தம் இரண்டு பகுதிகளாக நடத்தப்படும் இப்போட்டியில், முதலில் C, C++, Java, Python ஆகிய புரோகிராம்களின் அடிப்படையில் நான்கு சுற்றுகள், அவற்றுக்கான கேள்விகளைக் கொண்டு தொடர் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து கரோனா சூழலைப் பொறுத்து ஒரு நேரடி சுற்றும் நடத்தப்படும்.

இதற்கான கேள்வித்தாள்கள் அமிர்தாவில் உள்ள பொறியியல் மாணவிகளால் மட்டுமே உருவாக்கப்படும் என்றும், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவிகளும் அதிகபட்சம் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாகப் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கையை வளர்க்க வகுப்புகள்

மேலும், போட்டிக்கு முன் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க தொடர் ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி குறித்த மேற்படி தகவல்களைamrita.edu/jeeccஎன்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம். வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மருத்துவம் இந்தியா வெற்றி பெற வேண்டிய துறை - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details