இது குறித்து "மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் முயற்சியால், ஜெனிடிக் லைஃப் சைன்சஸ், வர்தா நிறுவனம், மியூகோர்மைகோசிஸுக்கு சிகிச்சையளிப்பதற்காக ’ஆம்போடெரிசின் பி’ ஊசி மருந்துகளைத் தயாரித்துள்ளது. இதுவரை ஒரே ஒரு நிறுவனத்தால் மட்டுமே இந்த மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது" என்று அவரது அலுவலகம் சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மருந்துக் குப்பிகள் விநியோகம் திங்கள்கிழமை முதல் தலா 1,200 க்கு தொடங்கும் என்றும், தற்போது குப்பி ஒன்று 7,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.