தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்காத அமித் ஷா - amit sha

தமிழ்நாட்டு மக்களின் முடிவை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

AmitShah
அமித் ஷா

By

Published : May 2, 2021, 8:50 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வெற்றிவாகை சூடியுள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட பலர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் தீர்ப்பைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில், "5 ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்

அமித் ஷா ட்வீட்

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம் எனத் தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் ஆட்சியில் அமரவிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் தேர்தல் குறித்து அமித் ஷா ட்வீட் செய்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details