டெல்லி: நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்தியா தலைமை தாங்கும் இந்த மாநாட்டிற்காக டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வந்தடைந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று (செப் 8) ஜி20 அமைப்பின் இந்தியக் குழு தலைவரும், நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமிதாப் காந்த், “ஜி20 மாநாட்டின் முடிவில் உலகளாவிய தெற்கின் குரல் பிரதிபலிக்கும் என டெல்லி தலைவர்கள் முடிவெடுத்து உள்ளனர்.
பசுமை வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை, காலநிலை நிதி ஆகியவை இந்தியாவின் முன்னுரிமைகளில் உள்ளது. இந்தியாவின் பிரசிடென்சி என்பது உள்ளடக்கியதாகவும், தீர்க்கமானதாகவும், இலக்கு உள்ளதாகவும் மற்றும் செயல்பாடு சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
நாங்கள் எங்களது பிரசிடென்சியை வசுதெய்வ குடும்பகம் என்ற உலகம் ஒரே குடும்பம் என்பதன் அடிப்படையில் உள்ளதாக இந்தியா உணர்கிறது. நிலையான வளர்ச்சி இலக்குகள்தான் (SDG) எங்களது இரண்டாவது முன்னுரிமையாக இருக்கும். ஏனென்றால், 169 நிலையான வளர்ச்சி இலக்குகளில் 12 மட்டும்தான் உள்ளது.