தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி - பிரம்மாஸ்த்ரா பார்ட் ஒன்று

நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி
அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி

By

Published : Aug 24, 2022, 11:36 AM IST

பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தை என அமிதாப் பச்சனின் குடும்பத்தாருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் கரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் அனைவரும் குணமடைந்தனர்.

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் இப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். .

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். இதனிடையே அமிதாப் பச்சனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரம்மாஸ்த்ரா பார்ட் 1’ என்ற திரைப்படம், செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க:அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பிரபலம்: மாத வாடகை இவ்வளவா?

ABOUT THE AUTHOR

...view details