கொல்கத்தா: மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தை கைப்பற்றும் வகையில் அமித் ஷா, “பார்முலா 23” அறிமுகப்படுத்தியுள்ளார்.
அது என்ன பார்முலா 23 என்று பார்க்கலாம். அதிலுள்ள முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
- தொழிலாளர்கள், தொண்டர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் நமோ செயலியை பதிவிறக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அளிக்கும் செய்திகள் மற்றும் திட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
- தொகுதிகளை மண்டல வாரியாக ஏபிசிடி எனப் பிரிக்க வேண்டும். அதில் டி பிரிவில் தொண்டர்களும், சி பிரிவில் கட்சி நிர்வாகிகளும் கவனம் செலுத்த வேண்டும். தொண்டர்கள், ஆதரவாளர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்களை மாநில தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியை மக்கள் கேட்கும் வகையில் குறைந்தது ஆறு நிகழ்ச்சிகளாவது நடத்த வேண்டும்.
- ஒவ்வொரு வாக்கு சாவடி குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனை அடிப்படை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களுடன் பாஜகவினர் தொடர்பில் இருக்க வேண்டும்.
- நரேந்திர மோடி அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் பயன்பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் பாஜக தொண்டர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.
- பாஜக கட்சியின் சின்னமாக தாமரை, மக்கள் அதிகம் கூடும், அதேநேரம் வாக்குச் சாவடி அருகேயுள்ள ஐந்து இடங்களில் வைக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும்.