அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாஜக பெரும் முனைப்பு காட்டி வருகிறது. இதையொட்டி பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்தில் தங்கள் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிவரும் சூழலில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் முன்னதாகத் தாக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்று (டிச.19)மேற்கு வங்கம் சென்றடைந்தார்.