டெல்லி: மறைந்த மத்திய நிதி அமைச்சரின் 68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று (டிச.28) ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லியின் சிலையை திறந்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த மத்திய நிதி அமைச்சரின் 68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி சிலை திறப்பு விழா இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டி.டி.சி.ஏ) ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித் ஷா, மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் திருவுருவ சிலையை திறந்துவைத்தார்.