நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாள் விழா நேற்று(ஜன. 23) கொண்டாடப்பட்டது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயுதப்படை வீரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருந்து காப்பீட்டுத் திட்டம் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பேர் பயனடைவார்கள்.