கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். இன்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹிங்கல்கஞ்ச் பகுதியில், எல்லை பாதுகாப்புப் படைக்கான மிதக்கும் எல்லைப்புற காவல்நிலையங்களை திறந்துவைத்தார்.
பின்னர், அந்த காவல்நிலையங்களில் படகு ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்தார். மேற்குவங்கத்தின் சுந்தர்பன்ஸ் பகுதியில் எளிதில் அணுக முடியாத பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகரிக்கும் நோக்கிலேயே மிதக்கும் எல்லைப்புற காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
படகு ஆம்புலன்ஸ் வசதியால் மக்களுக்கு எளிதில் மருத்துவ சேவை கிடைக்கும் என்றும், சுந்தன்பன்சின் சாஹேப் காலி முதல் பிகார் மாநிலத்தில் உள்ள ஷாம்ஷர் நகர் வரை இந்த படகு ஆம்புலன்ஸ் வசதி பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.