தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு, புதுச்சேரியில் அமித் ஷா இன்று பரப்புரை - Amit Shah's campaign in Velayuthampalayam

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று புதுச்சேரி, தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்கிறார்.

Amit Shah's election campaign in Tirukovilur
Amit Shah's election campaign in Tirukovilur

By

Published : Apr 1, 2021, 7:16 AM IST

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினரின் பரப்புரை பயணம் தீவிரமடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக பிரதமர் மோடி மார்ச் 30ஆம் தேதி புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டிற்கும் வந்தார். நேற்று (மார்ச்.31) உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.01) புதுச்சேரி, தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இன்று காலை 9.30 மணியளவில் புதுச்சேரி வரும் அவர், கருவாடிகுளத்தில் உள்ள சித்தாந்த கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

இதையடுத்து லாஸ்பேட்டை தொகுதி வேட்பாளர் சுவாமிநாதன், காமராஜ் நகர் வேட்பாளர் ஜான்குமார், காலாப்பட்டு தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோரை ஆதரித்து லாஸ்பேட்டையில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதியம் 12.15 மணியளவில் திருக்கோவிலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். மாலை 4:00 மணிக்கு வேலாயுதம்பாளைத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

இவரது வருகையை முன்னிட்டு புதுச்சேரி, தமிழ்நாட்டில் தீவர பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details