ஸ்ரீநகர்: உள்துறை அமைச்சர் அமித் ஷா மே8ஆம் தேதி (அதாவது இன்று) ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மற்றும் பாகிஸ்தானில் (மேற்கு) இருந்து காஷ்மீர் வந்த அகதிகளுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருந்தார்.
இந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பாகிஸ்தானில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப் பாதையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்ட பின்னர் உள்துறை அமைச்சர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.