தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் எல்லையிலிருக்கும் பாதுகாப்புப் படையினரின் தியாகத்தைப் போற்றும் வகையில் தீபாவளியன்று அனைவரும் விளக்கு ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பிரதமர் மோடி வேண்டுகோள்; விளக்கேற்றிய அமித் ஷா - விளக்கேற்றிய அமித் ஷா
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று எல்லையில் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கு ஏற்றிவைத்தார்.
அவரின் வேண்டுகோளை ஏற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது மனைவி மற்றும் பேத்தியுடன் இணைந்து அகல் விளக்கு ஒன்றை ஏற்றிவைத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், “பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று எல்லையில் பாடுபடும் நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்காக இந்த விளக்கை ஒளிரச் செய்துள்ளோம். நான் ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒட்டுமொத்த நாடும் உங்களின் தியாகத்திற்கும் உழைப்புக்கும் கடமைப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.