தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை: மீண்டும் கொல்கத்தா சென்ற அமித் ஷா! - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம்

கொல்கத்தா: தேர்தல் பரப்புரை பணிகளுக்காக, கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக அமித் ஷா கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார்.

Amit Shah'
அமித்ஷா

By

Published : Feb 18, 2021, 3:19 PM IST

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் பணிகளில் பாஜக தீவிரமாகக் களமிறங்கி உள்ளது.

இந்நிலையில் , தேர்தல் பரப்புரைப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கொல்கத்தா விரைந்துள்ளார். அவர் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் காட்சி வெளியாகியுள்ளது

இந்தப் பயணத்தின்போது, அவர் பாரத் சேவாஷ்ரம் சங்கம், கபில் முனி ஆசிரமத்தைப் பார்வையிடுவார். மேலும், பாஜகவினர் நடத்தும் ரோட்ஷோவை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக, கடந்த 11ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'புதுச்சேரி மக்களை நான் நேசிக்கிறேன்' - தமிழிசை சவுந்தரராஜன்

ABOUT THE AUTHOR

...view details