நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இது குறித்து நிலக்கரித்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறானது. மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன்கள். இது 4 நாட்களுக்கு போதுமானது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளது. அது மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நிலக்கரி நிறுவனங்களில் இருந்து அதிக அளவிலான சப்ளை காரணமாக, அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி, இந்தாண்டு சுமார் 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தேவையின் தின சராசரி அளவு 18.5 லட்சம் டன்கள். இங்கு தினசரி நிலக்கரி விநியோகம் சுமார் 17.5 லட்சம் டன்களாக உள்ளது. பருவமழை நீடிப்பதன் காரணமாக, நிலக்கரி விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது.