பெங்களூரு : முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக எடியூரப்பா அறிவித்துள்ள நிலையில் மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை (Thavar Chand Gehlot) இன்று (ஜூலை 26) சந்திக்கிறார்.
இது தொடர்பாக வெளியான தகவலில் எடியூரப்பா ஆளுநர் சந்திப்பு மதியம் 2 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சராக இரண்டு ஆண்டுகளை எடியூரப்பா பூர்த்தி செய்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி விதான் சவுதாவில் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெற்றது.