இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துவருகிறது. அனைத்து மாநிலங்களிலும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் 43,211 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம், மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 658ஆக உள்ளது.
இந்த சூழலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தடுப்பூசி திட்டம் செயல்படுவது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.