டெல்லி: கோடை வெப்பம் காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
பள்ளிகள் பின்பற்ற வேண்டிய கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளாவன:
- பள்ளிகள் திறப்பின் நேரத்தை முன்கூட்டியே, அதாவது காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு மதியத்திற்குள் முடிக்கலாம்.
- மாணவர்களை சூரிய ஒளியில் நேரடியாக விளையாடவோ, நடமாடவோ அனுமதிக்க வேண்டாம்.
- அதேபோல் காலை நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம்.
- பள்ளி வாகனங்களில் கூட்டம் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- மாணவர்கள் தண்ணீர் பாட்டில்கள், தலைக்கு தொப்பிகள், குடைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லவும். திறந்த வெளியில் இருக்கும்போது அவற்றை பயன்படுத்த வேண்டும்.
- குளிர்ந்த குடிநீர் பல இடங்களில் கிடைப்பதை பள்ளி உறுதி செய்யவேண்டும். ஆசிரியர்கள் அவ்வப்போது தண்ணீர் குடிக்க மாணவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
- பள்ளியில் அனைத்து வகுப்பறைகளும் சரியான காற்றோட்டமாக இருப்பதையும், அனைத்து மின்விசிறிகள் செயல்படுவதையும் உறுதி செய்யவேண்டும். அதேபோல் மாணவர்கள் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
- பள்ளியின் கழுத்து டை போன்ற வற்றுக்கு விலக்கு அளிக்கலாம்.
- பள்ளிகளில் உப்பு, சர்க்கரை கரைசல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு லேசான வெப்ப தாகம் ஏற்பட்டால்கூட அவர்களுக்கு முதலுதவி அளிக்க பயிற்சி பெற்றவர்கள் இருக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு பிரச்சினை அதிகம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைகளை அணுகுவதை பள்ளிகள் உறுதி செய்யவேண்டும். பள்ளிகளில் அத்தியாவசியமான மருத்துவப்பெட்டிகள் அதாவது முதலுதவி பெட்டிகள் இருக்க வேண்டும்.
- தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தண்ணீர் பாட்டில் கொண்டுவர அனுமதிக்க வேண்டும்.
- அதேபோல் தேர்வு நேரங்களில் மாணவர்களு்ககு எளிதில் குடிநீர் கிடைப்பதை தேர்வு மையங்கள் உறுதி செய்யவேண்டும்.