தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவாகரத்து வதந்தி; சோயிப் மாலிக்குடன் ரியாலிட்டி ஷோவை அறிவித்தார் சானியா மிர்சா - Amid divorce rumours Sania Mirza

விவாகரத்து பற்றிய செய்திகளுக்கு மத்தியில், சானியாவும், சோயப் மாலிக்கும் விரைவில் ஒரு ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக தோன்றுவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரியாலிட்டி ஷோவை அறிவித்தார் சானியா மிர்சா
ரியாலிட்டி ஷோவை அறிவித்தார் சானியா மிர்சா

By

Published : Nov 14, 2022, 9:59 AM IST

டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சானியா மிர்சாவும், அவரது கணவர் சோயப் மாலிக்கும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. மாலிக்குடனான 12 ஆண்டுகால திருமண வாழ்க்கையை சானியா மிர்சா முடித்துக் கொண்டாரா என்பதை அறிய கிசுகிசு விரும்பிகள் ஆர்வமாக இருந்த வேளையில், ​​இந்த ஜோடி ஒன்றாக ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

விவாகரத்து பற்றிய செய்திகளுக்கு மத்தியில், சானியா மிர்சாவும், சோயப் மாலிக்கும் விரைவில் உருதுஃப்ளிக்ஸ் ரியாலிட்டி ஷோவான தி மிர்சா மாலிக் ஷோவை ஒன்றாக தோன்றுவதை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இந்த ஜோடி பிரிந்ததாக வந்த செய்திகள் தவறானவையா அல்லது ரியாலிட்டி ஷோவிற்கு முன்னதாக இது ஒரு ஹைப் உருவாக்குவதற்காக ஜோடிக்கப்பட்டதாக என அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

சமீபத்தில், சோயப் மாடல் அழகியுடன் இணைந்திருக்கும் புகைப்படம், சானியாவுடனான விவாகரத்துக்கு வழிவகுத்தது என செய்திகள் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக சானியாவோ, சோயிப்போ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சுவாரஸ்யமாக, இன்ஸ்டாகிராமில் சோயப் மற்றும் சானியா இன்னும் ஒருவரையொருவர் பின்தொடர்கின்றனர். இருப்பினும், சானியாவின் சமூக வலைதளப் பதிவுகள் எரியும் விவாகரத்து தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆனது.

சமீபத்தில், சானியா தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகனுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு,"கடினமான நாட்களில் எனக்கு கிடைத்த தருணங்கள் izhaan.mirzamalik" என்று எழுதினார். மேலும் அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில் அவர் "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன?" என போஸ்ட் செய்திருந்தார்.

சானியா சமீபத்தில் துபாயில் ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. சானியா, துபாயின் பாம் ஜுமைராவில் உள்ள ஒரு வில்லாவில் சோயிப் மாலிக்குடன் முன்பு வசித்து வந்தார், இருப்பினும், அவர் சமீபத்தில் துபாயில் வேறு இடத்திற்குச் சென்றார்.

இதையும் படிங்க:’குழந்தைகளைப் போற்றுவோம், எதிர்காலத்தை காப்போம்’ - முதலமைச்சர் வாழ்த்து...

ABOUT THE AUTHOR

...view details