கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பொம்மை தலைமையிலான புதிய அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில்தான் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை தற்போதைய முதலமைச்சர் பொம்மை சந்தித்தார்.
புதிய அமைச்சரவையில் அதிருப்தி
பாஜக மேலிட அழுத்தத்தையடுத்து, எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மையை பாஜக மேலிடம் தேர்வு செய்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்ச் சிங், சிறுகுறு தொழில்துறை அமைச்சர் நாகராஜ் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் அதிருப்தி அளிக்கும் விதமாக உள்ளதாக வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் இவர்கள் எடியூரப்பாவையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் பொம்மை தற்போது எடியூரப்பாவைச் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. கர்நாடகாவின் முதலமைச்சராக பொம்மை பொறுப்பேற்று 28 நாள்களே நிறைவடைந்துள்ளது.
இதையும் படிங்க:’ஆக்.14 பிரிவினை நினைவு தினம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு