புதுச்சேரி:அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்தவர் மரியா(64) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ளார். புதுச்சேரியில் மூன்று நாள்கள் தங்கி சுற்றிப்பார்த்துள்ளார். இதனிடையே புஸ்சி வீதியில் உள்ள ஒரு கலைப்பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளர் ராகுல் (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதுது.
இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின் மரியா தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய சென்றார். இடையில் இருவரும் போனில் பேசிக்கொண்டனர். இவர்களின் நட்பு ஆழமானது. இந்நிலையில் மரியா புதுச்சேரிக்கு வந்து, சந்திப்பதாக தெரிவித்தார். ராகுலும் அவரை சந்திப்பதாக ஒப்புக்கொண்டார்.