தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - அமெரிக்க எடுக்கும் முடிவு எதிர்காலத்தை தீர்மானிக்கும்.. அமெரிக்க அதிபர் பைடன்! - பிரதமர் மோடி அமெரிக்க பயணம்

இந்தியா - அமெரிக்கா இணைந்து எடுக்கும் முடிவுகள் வரவிருக்கும் தலைமுறைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்

Modi
Modi

By

Published : Jun 22, 2023, 10:12 PM IST

வாஷிங்டன் : இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு, 21ஆம் நூற்றாண்டின் எல்லையற்ற உறவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார். வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை கட்டித் தழுவி அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜின் பைடன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்த பிரதமர் மோடியை வரவேற்பதாக கூறினார். சுகாதாரம், பருவநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் எழும் உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்ட பணிகளில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமாக பணியாற்றி வருவதாக பைடன் தெரிவித்தார்.

இரு நாடுகள் இணைந்து எடுக்கும் முடிவுகள் வரவிருக்கும் தலைமுறைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றும் இந்தியாவின் ஒத்துழைப்போடு, சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான குவாட் அமைப்பை வலுப்படுத்தி உள்ளதாக பைடன் கூறினார்.

பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க அதிபர் பைடனுடனான இரு தரப்பு பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி இருப்பதாகவும், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று தான் நம்புவதாகவும் பதிவிட்டு உள்ளார்.

இந்த நிகழ்வில் அமெரிக்க அமைச்சரவை உறுப்பினர்கள், முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் வளர்ந்து வரும் இந்திய - அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் வெள்ளை மாளிகையில் ஒவெல் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோர் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. செய்தியாளர்களின் இரண்டு கேள்விகளுக்கு இரு நாட்டு தலைவர்களும் பதிலளிக்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவைகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விருந்தின் போது இரு தரப்பினரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்பட்டு உள்ளது. அமெரிக்க அதொபர் பைடன் மற்றும் ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார்.

வெள்ளை மாளிகையில் உள்ள தெற்கு பகுதியில் உள்ள பூங்காவில் வைத்து பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் விருந்து கொடுக்கினறனர். இந்த விருந்தில் பல்துறை வல்லுநர்கள் உள்ளிட்ட 400 விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த 21ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த யோகா விழாவில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட 27 கோடி பேர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தையொட்டி பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா விமான படைக்கு என்ஜின் தயாரித்து வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நிலவு மற்றும் விண்வெளி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட அர்ட்டிமெஸ் ஒப்பந்தம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க :எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா பானர்ஜி, ஸ்டாலின் பங்கேற்பு... மிரட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்!

ABOUT THE AUTHOR

...view details