வாஷிங்டன் : பிரதமர் மோடியின் எதிர்காலம் இந்தியா - அமெரிக்கா கையில் என்னும் வாசகத்தின் உணர்த்தும் வகையில், AI என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட டீ சர்ட்டை பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன் பரிசாக அளித்தார்.
அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் நியூ யார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஏறத்தாழ 180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கோடிக்கணக்கிலான மக்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அங்கிருந்து வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க ராணுவம் அளித்த ராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். தொடந்து அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பைடைன் மற்றும் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுகாதாரம், பருவநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் எழும் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு, எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து இரு நாடுகளின் பிரதிந்திகள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இஸ்ரோ நாசா ஒன்றிணைந்து 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் அர்ட்டெமிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இரு நாடுகள் இணைந்து எடுக்கும் முடிவுகள் வரவிருக்கும் தலைமுறைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றும் இந்தியாவின் ஒத்துழைப்போடு, சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான குவாட் அமைப்பை வலுப்படுத்தி உள்ளதாகவும் அதிபர் பைடன் கூறினார்.
இதனிடையே இந்தியா - அமெரிக்கா இடையிலான தொழிநுட்ப ஒத்துழைப்பு குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மைக்ரோசாப்ட் தலைலை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரதமர் மோடியின் எதிர்காலம் AI எனப்படும் அமெரிக்கா - இந்தியாவின் கையில் என்ற எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட்டை அமெரிக்க அதிபர் பைடன் பரிசளித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்ததுடன் ஒப்பிடுகையில் நிறைய விஷயங்கள் மாறிவிட்டது, ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பை ஆழப்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு தொடர்ந்து மாறாமல் உள்ளது என்றார். கடந்த சில ஆண்டுகளில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் மற்றொரு AI-யான அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க :இந்தியா - அமெரிக்க எடுக்கும் முடிவு எதிர்காலத்தை தீர்மானிக்கும்.. அமெரிக்க அதிபர் பைடன்!