தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அம்பேத்கர் பேனர் விவகாரம்: காவலர்கள் முன்பே கடுமையாக மோதிக்கொண்ட பாஜக - காங்கிரஸ் கட்சியினர் - Sethurapattu

புதுச்சேரி: சேதராப்பட்டு காவல் நிலையத்தில், பாஜக - காங்கிரஸ் கட்சியினர், ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Dec 7, 2020, 1:54 PM IST

அம்பேத்கர் நினைவு தினம் நேற்று(டிச.06) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் பாஜகவினர் நேற்று(டிச.06) பத்துக்கன்னு, சேதராப்பட்டு சாலையில் பேனர் வைத்தனர். அதற்கு அப்பகுதியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர், கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் மத்தியில் கடும்மோதல் ஏற்பட்டது.

காவலர்கள் முன்பே கடுமையாக மோதிக்கொண்ட பாஜக - காங்கிரஸ் கட்சியினர்

இத்தகவல் அறிந்த புதுச்சேரி சேதராப்பட்டு காவலர்கள் சம்பவம் இடம் வந்து, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு வருமாறுகூறி, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அப்போது உயர் காவல் அலுவலர்கள் காவல் நிலையத்தில் இல்லாத நிலையில், இருதரப்பினரும், காவல் நிலையப் பகுதியிலேயே, ஒருவருக்கு ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். அதன் பின்னர் காவல் துறையினர், துப்பாக்கி கொண்டு மிரட்டியும், தடியடி நடத்தியும் தாக்குதல் சம்பவத்தை தடுத்தி நிறுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - போலீஸுக்கு அடி உதை

ABOUT THE AUTHOR

...view details