டெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளரான முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 92.7 பில்லியன் டாலர்களாக (ஏறத்தாழ ரூ.6.95 லட்சம் கோடி) உள்ளது.
இந்தச் சூழலில், முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் குடியேற இருப்பதாகத் தகவல் வெளியானது. பக்கிங்ஹாம்ஷயர் கவுண்டி கிளப்பின் ஸ்டோக் பார்க் என்னும் மாபெரும் பங்களாவுடன் கூடிய 300 ஏக்கரை, சில நாள்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (RIL), ரிலையன்ஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RHIIL) ஆகிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன.
தாயார் கோகிலா பென்னுடன் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பக்கிங்காம் அரண்மனை போன்றது
மொத்தம் 49 படுக்கை அறைகள், மேம்பட்ட மருத்துவ வசதிகள் என இம்மாளிகை பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த மாளிகை இங்கிலாந்து மகாராணியின் பக்கிங்காம் அரண்மனை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி குழும நிறுவனங்கள் வாங்கியுள்ள ஸ்டோக் பார்க் கிளப் சமீபகாலமாக, அம்பானியும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி லண்டன் பயணம் மேற்கொண்டு வந்தனர். இதன் பொருட்டே, முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் லண்டனில் குடியேற இருப்பதாகக் கூறப்பட்டது.
ஸ்டோக் பார்க் மாளிகை
இந்நிலையில், இது குறித்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்,"அம்பானி குடும்பம் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் மாளிகையில் வசிக்கத் திட்டமிட்டுள்ளது எனச் செய்தித்தாள்களில் வந்த செய்திகள், சமூக வலைத்தளங்களில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
உலகத்தில் வேறு பகுதியில்
எங்கள் நிறுவனத்தின் தலைவர் (முகேஷ் அம்பானி), அவரின் குடும்பத்தினர் யாருக்கும் லண்டனிலோ அல்லது உலகத்தில் வேறு பகுதியிலோ குடியேறும் எண்ணமில்லை என்பதை ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் தெளிவுபடுத்த விரும்புகிறது.
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்
லண்டனில் வாங்கியுள்ள ஸ்டோக் பார்க் கிளப்பை, முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு விடுதியாக மேம்படுத்துவதையே எங்கள் நிறுவனங்கள் (RIL, RHIIL) நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
மேலும், இது இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பல் (Hospitality) துறையின் தடத்தை உலகளவில் விரிவுபடுத்தும்" எனத் தெரிவித்துள்ளது. ஆனால், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தொடர் லண்டன் பயணம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
தற்போது, முகேஷ் அம்பானி மும்பை அல்டாமவுன்ட் சாலையில் 4 லட்ச சதுர அடி பரப்பிலான ஆன்டிலியா என்ற சொகுசு குடியிருப்பில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வழக்கம்போல் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி!