தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Amazon Layoff : அமேசானில் 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்? - அமேசான் லே ஆப்

அமேசான் நிறுவனத்தில் இருந்து 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உளளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Amazon Lay offs nine thousand workers
Amazon Lay offs nine thousand workers

By

Published : Apr 27, 2023, 2:25 PM IST

நியூயார்க் : கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது முதலே பெரும் பொருளாதார பேரிழப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. நிதி நிலையை சுட்டிக் காட்டி டிவிட்டர் தொடங்கி பெரும் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் பணி நீக்கத்தை கையில் எடுத்து உள்ளன. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலை கொடுத்து வாங்கியது முதல், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி பணி நீக்க கலாச்சாரத்தை பெரியளவில் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்கள் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட பணியாளர் நீக்கத்தை கையில் எடுத்தன. இந்த முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகத்தில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனமும் பணியாளர் நீக்கத்தில் மும்முரமாக இறங்கி உள்ளது.

ஆண்டு தொடக்கத்தில் நடப்பாண்டுக்குள் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி நீக்கம் குறித்த அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு அமேசான் வெப் சிரீஸ் தலைமை செயல் அதிகாரி ஆடம் செலிப்ஸ்கை மற்றும் மனித வள மேம்பாட்டு தலைவர் பெத் கலெட்டி ஆகியோர் தெரியப்படுத்தி உள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மத்திய அமெரிக்கா நாடான கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளிலே அதிகளவில் பணியாளர் நீக்கம் நடத்தப்பட்டு உள்ளாதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. cloud computing, அமேசான் வெப் சீரிஸ் மற்றும் மனித வளத்துறை ஆகிய பிரிவுகளில் இந்த முறை பணியாளர் நீக்கம் அதிகபட்ச அளவில் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் குறித்து கடந்த மார்ச் மாத இறுதியில் அமேசான் நிறுவனம் அறிவித்து இருந்தது. ஆகையால் இந்த பணி நீக்கம் திட்டமிட்டு நடத்தப்பட்டவை எனக் கூறலாம். அதேநேரம் கூடுதலாக சில ஆயிரம் ஊழியர்களை அமேசான் நிறுவனம் விரைவில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா காலத்தில் இருந்த டிஜிட்டல் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மவுசு தற்போது சாதரண நிலைக்கு திரும்பியதால் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. தற்போதைய சூழலில் நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை உள்ளிட்ட காரணங்களால் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஆட்குறைப்பை கையில் எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :Reliance Capital : ரிலையன்ஸ் கேபிட்டலை விலைக்கு வாங்கும் இந்துஜா குழுமம்? அனில் அம்பானிக்கு அடிமேல் அடி!

ABOUT THE AUTHOR

...view details