ஜம்மு: கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தாண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அமர்நாத் யாத்திரை சங்க உறுப்பினர்களுடன் உரிய முறையில் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை
கோவிட் பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை மட்டும்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக, அமர்நாத் பனி லிங்கத்துக்கு ஆரத்தி உள்ளிட்ட பாரம்பரிய பூஜைகள் வழக்கம்போல் நடத்தப்படும்” என்றார்.
அமர்நாத் யாத்திரை ரத்து- துணைநிலை ஆளுநர் அறிவிப்பு 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
பனி லிங்கம்
தொடர்ந்து கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் பனிலிங்கம் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த யாத்திரை 56 நாள்கள் நடைபெறும். யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் முன்பதிவு கோவிட் பரவலின் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் 22ஆம் தேதி நிறுத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பரவல் எதிரொலி: அமர்நாத் யாத்திரை ஆன்லைன் முன்பதிவு ரத்து