ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகே நேற்று (ஜூலை 8) மாலை 5.30 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. மேகவெடிப்பால் அப்பகுதியில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், அமர்நாத் குகை கோயிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புனித குகை அருகே வெள்ளத்திற்கு ஒதுங்கிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.