டெல்லி:பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள், அமரீந்தர் சிங்குக்கும், கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவந்தது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மேலிடம் சித்துவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தான் அவமதிக்கப்பட்டதாக கூறி தனது முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அவருக்கும், அமித் ஷாவுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது என்றும், அவர் பாஜகவில் இணைவார் என்றும் அப்போதே யூகங்கள் வெளியாகின.