1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் 1972ஆம் ஆண்டு அணையா விளக்கான அமர் ஜவான் ஜோதி உருவாக்கப்பட்டது.
இந்த அமர் ஜவான் ஜோதி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து, தற்போது இந்தியா கேட் பகுதியில் உள்ள இந்த விளக்கை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் இணைக்கப்படவுள்ளது.
இரு விளக்குகளையும் இணைக்கும் நிகழ்வை ஏர் மார்ஷல் பலபத்ரா ராதாகிருஷ்ணா மேற்கொள்ளவுள்ளார். இந்த இடமாற்ற நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது.