டெல்லி : டெல்லி இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியை, அருகில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இடமாற்றம் செய்வது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “1971ஆம் ஆண்டில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமர் ஜவானி ஜோதி ஏற்றப்பட்டது. இந்த ஜோதி நினைவிடத்தில் வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
எனவே போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுதான் உண்மையான கதாநாயகர்களை கௌரவப்படுத்தும் வகையில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தேசிய போர் நினைவிடம் ஒன்றை உருவாக்க வேண்டும் என சுமார் காங்கிரஸிற்கு இதுவரை தோன்றவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்பு, 2019ஆம் ஆண்டு போர் நினைவிடத்தை திறந்துவைத்தார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமர் ஜவான் ஜோதியை இடமாற்றம் செய்வதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியா கேட் அருகே இருக்கும் நினைவிடம் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்த இடத்தில் 1970 பாகிஸ்தானுடனான போரை நினைவு கூரும் வகையில் அமர் ஜவான் ஜோதி என்னும் அணையா விளக்கு ஏற்றப்பட்டது.
இந்த விளக்கு தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்படும் என வெள்ளிக்கிழமை (ஜன.21) இந்திய தேசிய ராணுவம் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : அமர் ஜவான் ஜோதி இடம்மாற்றம் - கிளம்பியிருக்கும் புது விவாதம்