தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 17, 2022, 10:16 AM IST

ETV Bharat / bharat

ஆல்வர் சிறுமி தாக்குதல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்

மாநில அரசின் விசாரணையில் போதிய முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் ஆல்வர் வழக்கு விசாரணையை மாநில அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.

ஆல்வர் சிறுமி தாக்குதல் வழக்கு
ஆல்வர் சிறுமி தாக்குதல் வழக்கு

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் பகுதியில் மாற்று திறனாளி சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில உள்துறை அமைச்சர், தலைமை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநில அரசின் விசாரணையில் போதிய முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் மாவட்டத்தின் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி சாலை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அதற்கான தடயங்கள் இல்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க எதிர்க்கட்சியான பாஜக தொடர் அழுத்தம் கொடுத்துவந்தது.

இதையும் படிங்க:Covid-19 India: ஓராண்டை நிறைவு செய்த தடுப்பூசி திட்டம் - சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details