தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிவர் புயலால் சாய்ந்த மரத்தை நட்டுவைத்த முன்னால் மாணவர்கள் - ஆலமரம்

புதுச்சேரி: நிவர் புயலால் வேரோடு சாய்ந்த 60 ஆண்டு கால ஆலமரத்தை முன்னால் பள்ளி மாணவர்கள் மீண்டும் அங்கு நட்டு வைத்தனர்.

Tree planting
Pondicherry

By

Published : Nov 27, 2020, 9:24 PM IST

புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே நிவர் புயல் கரையை கடந்தது. இப்புயலால் புதுச்சேரியில் நகரப் பகுதியில் பலங்கால மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதில் குறிப்பாக 60 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த ஆலமரமும் புயலால் வோரோடு சாய்ந்தது.

அரியாங்குப்பம் மனவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு மேல் இருந்த இந்த மரம் சாய்ந்தது குறித்து அப்பள்ளியில் படித்த முன்னால் மானவர்களுக்கு வாட்ஸ்அப் குழு மூலம் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்து பார்த்து அவர்கள் சோகமடைந்தனர்.

பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து அதன் கிளைகளை சரி செய்து அதே இடத்தில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் வனத்துறை ஆலோசனை படி நிமிர்த்தி நட்டனர். இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இப்பள்ளியில் முதலமைச்சர் நாராயணசாமி பயின்றதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details