ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): தொலைபேசி ஒட்டுக்கேட்பு பிரச்சினை தொடர்பாக ராஜஸ்தான் மாநில சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர், முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் ஒரு பேஸ்புக் பதிவின் மூலம் 2020 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இவ்விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது. பின்னர் சட்டப்பேரவையில் இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டுவந்தது.
இதனை சபாநாயகர் சிபி ஜோஷி நிராகரித்தார். சட்டப்பேரவையின் பூஜ்ய நேரத்தின்போது எதிர்க்கட்சி துணை தலைவர் ராஜேந்திர ரதோட் மற்றும் பாஜக எம்எல்ஏ கலிசரண் சரஃப் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டுவந்தனர்.