அமராவதி: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் லிங்கபாலம் கிராமத்தில் சுமார் 300 தெரு நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து பேசிய தர்மஜிகுதேம் (Dharmajigudem) உதவி ஆய்வாளர் ரமேஷ், " கடந்த ஜூலை 24 ஆம் தேதி லிங்கபாலம் கிராமத்தில் சுமார் 300 தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்றுள்ளனர். நாய்களின் சடலங்களை, குளத்தில் குழியைத் தொண்டி புதைத்துள்ளனர்.
இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் சல்லாபள்ளி ஸ்ரிலதா, ஜூலை 29 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் 1960 உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
தெரு நாய்களின் எண்ணிக்கையைக் குறைத்திட, கிராம மக்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:புலியிடம் செந்நாய்களின் சேட்டை: சிரிப்பூட்டும் காணொலி🤣