தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சர் வீடு தேடி சென்ற கோவிட்-19 தடுப்பூசி: அலுவலர் சஸ்பெண்ட் - கர்நாடாக சுகாதார அலுவலர்

விதிமுறையை மீறி, அமைச்சரின் வீடு தேடி சென்று கோவிட்-19 தடுப்பூசி செலுத்திய கர்நாடாக சுகாதார அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Covid jab
Covid jab

By

Published : Apr 2, 2021, 10:07 PM IST

கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டத்தில் வசிக்கும் அம்மாநில வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டிலுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதில் சர்ச்சை வெடித்துள்ளது.

45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய நிலையில், பி.சி. பாட்டில் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நடத்தைவிதிகளின்படி, நாட்டின் அனைத்து குடிமக்களும் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த விதிமுறையை மீறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து, அம்மாவட்டத்தின் மருத்துவ அலுவலர் மகந்தர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ரெட்டி கோரியுள்ளார்.

இதையும் படிங்க:'தந்தையின் நினைவை அவமதிக்கும்போது அமைதியாக இருக்க மாட்டேன்' - உதயநிதிக்கு ஜெட்லி மகள் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details