தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவின் தாமரை சின்னத்தை திரும்ப பெற கோரி நீதிமன்றத்தில் மனு!

லக்னோ: பாஜகவின் தாமரை சின்னத்தை திரும்பப் பெறக்கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Allahabad
Allahabad

By

Published : Dec 10, 2020, 9:53 PM IST

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் கலி சங்கர், பாஜகவின் தாமரை சின்னத்தை திரும்பப் பெறக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தேசிய மலராக தாமரை இருப்பதால் அதனை பயன்படுத்த கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர், நீதிபதி பியூஷ் அகர்வால் ஆகியோர் கொண்ட அமர்வு, தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. பின்னர் வழக்கின் விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒதுக்கப்பட்ட சின்னங்களை அரசியல் கட்சிகள் லோகோவாக பயன்படுத்தி வருவதாகவும் ஆனால் அதனை தேர்தல் காலங்களில் மட்டுமே பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய அரசியலமைப்பு பிரிவு 324, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன்படி, ஒதுக்கப்படும் சின்னங்களை தேர்தல் காலங்களில் மட்டுமே பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சின்னங்களை கட்சியின் லோகோவாக நிரந்தரமாக பயன்படுத்த முடியாது என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details