ஏர் இந்தியா நிறுவனம் பெங்களூரு – சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஹைதராபாத் – சிகாகோ இடையே வாரம் இரண்டு முறை நேரடி விமானங்களை இயக்க உள்ளது. அதன்படி, மிக நீளமான வான்வெளித் தூரம் கொண்ட பெங்களூரு - சான்பிரான்சிஸ்கோ இடையேயான நேரடி விமானத்தை இயக்க மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு- சான் பிரான்சிஸ்கோ இடையேயான பயண தூரம் 14ஆயிரம் கி.மீ.க்கு அதிகமாகும். இது டெல்லி-சான்பிரான்சிஸ்கோ இடையேயான பயண தூரத்தை விட ஆயிரம் கி.மீ அதிகம். டெல்லியிலிருந்து செல்லும் விமானம் பசிபிக் கடல் பகுதி வழியாக செல்லும். பெங்களூருவில் இருந்து செல்லும் விமானம் அட்லாண்டிக் கடல் வழியாக செல்லவுள்ளது.