புதுச்சேரி: பொதுச்சொத்துகள் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து புகழ்மிக்க 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கிய நாளான இன்று(ஆக.9) ஆம் தேதி "இந்தியாவைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடன் போராடுமாறு, மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.
அதனடிப்படையில் புதுச்சேரியில் AITUC, INTUC, AICCTU, LLF, MLF, AIUTUC ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தின.
முக்கியமாக, தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்டத் தொகுப்புகளையும், மக்கள் விரோத வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும், வேலை இழப்பினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்வு காண வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.