நாகாலாந்து:சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த, அவரது சகோதரர் மகன் அஜித்பவார் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர், தனது 8 ஆதரவு எம்எல்ஏக்களுடன் மகாராஷ்ட்ராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2ஆம் தேதி மகாராஷ்ட்ராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு அணிகளாக பிரிந்துவிட்டதால், கட்சியைக் கைப்பற்றும் வேலைகளிலும் அஜித்பவார் ஈடுபட்டு வருகிறார். தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும், தனக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் அஜித்பவார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தேசியவாத காங்கிரசிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் சேர்ந்து அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சரத்பவார் அறிவித்தார். அமைச்சர்களாக பதவி ஏற்ற அனைவரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரியும் மகாராஷ்டிர சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Monsoon session: எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைப்பு!