தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் எம்.பி.க்கள் சந்திப்பு.. மக்களவைக்கு மீண்டும் வர வலியுறுத்தல்! - மக்களவை உறுப்பினர்கள் எத்தனை பேர்

மக்களவைக்கு மீண்டும் வருமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அனைத்து கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். அவை கண்ணியத்திற்கு ஏற்ப எம்.பிக்கள் நடந்து கொள்ளும் வரை மக்களவைக்கு வரப்போவதில்லை என ஓம் பிர்லா தெரிவித்து இருந்த நிலையில், அவரை எம்.பிக்கள் சந்தித்தனர்.

Om Birla
Om Birla

By

Published : Aug 3, 2023, 2:00 PM IST

Updated : Aug 3, 2023, 7:40 PM IST

All parties MPs meet Lok Sabha Speaker Om Birla and urge to attend lower house

டெல்லி : நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் மீண்டும் கலந்து கொள்ளுமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, அனைத்து கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவாகாரத்தை கையில் எடுத்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாள்தோறும் நாடாளுமன்றம் போர்க்களம் போல் காட்சி அளிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடும் அதிருப்தியை தெரிவித்தார். எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதுவரை தான் மக்களவைக்கு வரமாட்டேன் என்று ஓம் பிர்லா தெரிவித்ததாக கூறப்பட்டது.

இன்று (ஆகஸ்ட் 3) வழக்கம் போல் மழைக் கால கூட்டத் தொடரின் 11வது நாள் கூடியது. ஓம் பிர்லாவுக்கு பதிலாக பாஜக தலைவர் ராஜேந்திர அகர்வால் மக்களவை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை மேற்கொண்டார். டெல்லி சேவைகள் மசோதா தொடர்பான விவாதம் மற்றும், டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்தான் எதிர்க்கட்சிகளின் பொறுப்பாளர் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், அனைத்து கட்சி எம்.பிக்களும் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அவைக்கு வருமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே, பகுஜான் சமாஜ் கட்சி எம்.பி ரித்தேஷ் பாண்டே, பாஜக எம்.பி ராஜேந்திர அகர்வால், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து மீண்டும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு வலிட்யுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :Parliament Adjourned : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

Last Updated : Aug 3, 2023, 7:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details