புதுச்சேரி:அரசு துறைகளில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மேல்நிலை எழுத்தர் ( UDC) பணிக்கான தேர்வில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய(EWS) பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அரசு அறிவித்திருக்கிறது.
இதனை எதிர்த்து முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், திமுக எம்எல்ஏ செந்தில்குமார்,விடுதலை சிறுத்தை கட்சி, திராவிட கழகம்,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்றன.