தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆப்கனில் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளார்கள் - அரசு தரப்பு தகவல் - தாலிபான் செய்திகள்

ஆப்கனில் நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது

Taliban
Taliban

By

Published : Aug 21, 2021, 6:05 PM IST

ஆப்கனில் உள்ள காபூல் விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேறக் காத்திருந்த 150 பேர் தாலிபான்களால் கடத்தப்பட்டதாக இன்று (ஆகஸ்ட் 21) முன்பகலில் செய்திகள் வெளியாகின. ஆப்கனைச் சேர்ந்த ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிட்டன.

இந்த 150 பேரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும் கூறப்பட்டது. இந்த செய்திகள் வெளியானதுமே, தாலிபான் செய்தித்தொடர்பாளர் அகமதுல்லா வாசீக் மறுப்புத் தெரிவித்தார்.

மறுப்புத் தெரிவித்த தாலிபான் அமைப்பு

இந்நிலையில், இந்திய அரசு வட்டாரமும் ஆப்கனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக உறுதியளித்துள்ளது. இந்தியர்களுக்கு உரிய முறையில் உணவு வழங்கப்பட்டு, அவர்கள் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப் படை விமானம் மூலம் இதுவரை 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று (ஆகஸ்ட் 21) இந்திய விமானப்படையின் C-130J விமானம் மூலம் 85 இந்தியர்கள் இந்தியா திரும்புகின்றனர். இந்தியர்களின் வெளியேற்றத்துக்கு அமெரிக்காவும் உதவிகள் செய்துவருகிறது.

இதையும் படிங்க:மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு!

ABOUT THE AUTHOR

...view details