ராய்ப்பூர்: 51வது அகில இந்திய மேயர்கள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் இன்று(ஆக.27) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 48 மேயர்கள் கலந்து கொண்டனர்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகல் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நாளைய மாநாட்டில் ஆளுநர், எம்பிக்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.