டெல்லி:ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரத்துசெய்யப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்பட்டுவந்தனர்.
காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல்
இந்நிலையில், காஷ்மீரில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்டவும், அப்பிராந்தியத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவும் முனைப்பு காட்டிவருகிறது.
இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜூன் 24) பிற்பகல் 3 மணிக்கு உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.
14 தலைவர்களுக்கு அழைப்பு
இதில் பங்கேற்குமாறு காஷ்மீரின் எட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 14 தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர், காஷ்மீரிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு ஏற்கனவே சென்றடைந்துள்ளனர்.