தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி - தெலங்கானாவில் செப்டம்பர் 1ஆம் தேதி திறப்பு

செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் தெலங்கானாவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Chief Minister KCR
Chief Minister KCR

By

Published : Aug 24, 2021, 9:46 AM IST

தெலங்கானாவில் கல்வி நிறுவனங்கள் திறப்பது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 23) ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அம்மாநில கல்வித் துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, தலைமைச் செயலர் சோமேஷ் குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அங்கன்வாடிகள் தொடங்கி பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு முன்னதாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் முறையாகத் தூய்மைப்படுத்தி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. மார்ச் மாதம் இரண்டாம் அலை உச்சமடைந்ததால் தெலங்கானாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

தற்போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து மாநில அரசிடம் தெலங்கானா உயர் நீதிமன்றம் ஜூலை மாதம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலமும் செப்டம்பர் ஒன்றுமுதல் கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதியளித்துள்ளது.

இதையும் படிங்க:ஜெர்மனி பிரதமருடன் நரேந்திர மோடி ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details